Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சித்தார்த் யார், எந்த படத்தில் நடித்தார்? நக்கலாக கேட்ட அமைச்சருக்கு நடிகர் பதிலடி

தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என நடிகர் சித்தார்த் சில நாட்கள் முன்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது புதிதாக வந்துள்ள குடியுரிமை மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது பற்றித்தான் நடிகர் சித்தார்த் கோபமாக ட்விட் செய்தார்.

இந்நிலையில் இதுபற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு "சித்தார்த் யாரென்றே தெரியாது" என பதில் கூறினார்.

அமைச்சர் இப்படி பேசியிருப்பது பற்றி கருத்து கூறியுள்ள சித்தார்த், "நான் யார் என அவர் கேட்கிறார். கவலை இல்லை. 2014ல் சிறந்த நடிகர் விருதை 2017ல் எனக்கு அறிவித்தார்கள். அதை தற்போது வரை அரசு எனக்கு கொடுக்கவில்லை. விளம்பரத்திற்காக பேசவேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு என்று ஒரு இடம் இருக்கிறது" என கூறியுள்ளார் அவர்.