Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ராயப்பனாக நடித்திருக்க கூடாது, பிரபல சின்னத்திரை நட்சத்திரம் கருத்து

நடிகர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தை பார்த்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பது வழக்கம் தான்.

அந்த வகையில் சின்னத்திரை தொகுப்பாளரும் காமெடி நடிகருமான ஆதவன் அண்மையில் தான் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் விஜய் நடித்த ராயப்பன் கதாபாத்திரத்தை பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

அதாவது அவர் கூறியது "விஜய்க்கு இன்னும் வயதே ஆகவில்லை. அவர் ஏன் சீக்கிரமாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, அதற்காக நாங்கள் காத்திருப்போம். இனி வரும் படங்களில் நடிகர் விஜய் அவர்கள் இதனை தவிர்க்கலாம்." என்று கூறினார்.

மேலும், பேசிய ஆதவன் "தான் ரசிக்கும் ஒருவரை திரையில் வயதான கதாபாத்திரத்தில் பார்ப்பது பிடிக்காது" என்றும் வெளிப்படையாக தனது கருத்தை கூறினார்.

loading...