Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளினி மர்ம மரணம்! பிணமாக கிடந்த சம்பவம்

பிரபலங்கள் குறித்து செய்தி சட்டென மக்களின் கவனத்தை பெற்று விடுகிறது. அதில் ஒன்றாக தற்போது மர்ம மரணம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரளாவை சேர்ந்த தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜீகா ஜான். ஜாகிஸ் குக் புக் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் மாடல், பாடகி என கலக்கி வந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் சமயலைறையில் பிணமாக கிடந்துள்ளது போலிசாருக்கு தெரியவந்துள்ளது.

கொச்சியில் இருக்கும் அவரை தொலைபேசியில் அவரின் நண்பர் தொடர்பு கொண்ட போது போன் எடுக்கப்படவில்லை என்பதால் சந்தேகமான நண்பர் அண்டை வீட்டாரை அழைக்க ஜாகி இறந்தது தெரியவந்துள்ளது.

இது தற்கொலையா கொலையா என போலிசார் விசாரித்து வருகிறார்கள்.