Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டை விட்டு செல்ல தயார்! கொதித்து போன பிக்பாஸ் பிரபலம் காயத்திரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் அதிகம் பேசப்பட்டவர்களுள் ஒருவர் காயத்திரி ரகுராம். நடிகையும், நடன இயக்குனருமான இவர் இந்நிகழ்ச்சியால் வில்லி போலவே காட்டப்பட்டார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அவர் ட்விட்டரில் கூறிய சில கருத்துக்களால் சர்ச்சையை சந்தித்தார். அண்மைகாலமாக மத்தியில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி வருகிறார்.

இதில் அவர் இந்த மசோதா குறித்து மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை எதிர்கட்சியினர் பரப்பியுள்ளார்கள்.

இந்த நாட்டு குடிமக்களை வெளியேற சொல்லவில்லையே. முறையான வழிகளில் குடியுரிமை பெறுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

மக்கள் தொகை, பொருளாதாரம் என பல விசயங்கள் இதில் அடங்கியுள்ளது. இஸ்லாமியர்களும் எனக்கு சகோதரர்கள் போல தான்.

அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம். இந்த நாட்டு முஸ்லிம்கள் வெளியே சென்றால் நானும் செல்ல தயார் என அதிரடியாக பேசியுள்ளார்.