Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! திரையுலகம் சோகம் - வருத்தத்தில் ரசிகர்கள்

ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் மகள் ஸ்வேதா பச்சன்.

நிகல் நந்தா என்பவரை அவர் கடந்த 1997 ல் திருமணம் செய்து கொண்டார். ஸ்வேதாவின் மாமியார் ரிது நந்தா இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

71 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்த போதும் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

ரிது நந்தா மறைந்த பிரபல நடிகர் ராஜ்கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் ரிது நந்தாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.