Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளருடன் மோதல்? பட்டாஸ் பட இயக்குனர் ட்விட்டால் பரபரப்பு

தனுஷ் நடிப்பில் பட்டாஸ் படம் இன்று ரிலீஸ் ஆகிறது. விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தான் பட்டாஸ் படத்தையும் தயாரித்துள்ளது.

இந்த படத்தினை இயக்கியுள்ள துரைசெந்தில்குமார் ட்விட்டரில் மறைமுகமாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

"வேலை செய்ததற்காக கிடைக்கும் பலனும், வேலை செய்ததற்காக கேட்கும் கூலியும் ஒன்றாகுமா?#முதலாளித்துவம்" என அவர் ட்விட் செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்காமல் இருப்பது பற்றித்தான் இப்படி கூறியிருகிறார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் பரபரப்பாக பேசுகின்றனர்.