Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்ஜெட் இத்தனை கோடியா! கீர்த்தி சுரேஷின் பிரம்மாண்ட படம் - முக்கிய பிரபலங்களுடன் கூட்டணி

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கடந்த 2018 ல் வெளியான மகாநதி படம் தேசிய விருதை பெற்றுத்தந்தது. மறைந்த பிரபல நடிகை சாவித்திரியாகவே இப்படத்தில் வாழ்ந்ததாக பலரும் பாராட்டினர்.

தற்போது தமிழ் தெலுங்கு படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருகிறார். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் அவர் இணைந்துள்ளார்.

அடுத்தகாக அவர் மலையாளத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் குஞ்சலி மரைக்கார் என்ற வரலாற்று படத்தில் இணைந்துள்ளார்.

ரூ 100 கோடியில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் இப்படத்தை உலகம் முழுக்க 5000 ம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

மார்ச் 26 ம் தேதி வெளியாகும் இப்படத்தை மோகன் லால் குஞ்சலி மரைகாராக நடித்துள்ளார்.