Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிஜெக்ட் ஆன ஆல்தோட்டா பூபதி பாடலை திருட்டுத்தனமாக வைத்ததே நான்தான்.. யூத்-ல் ADயாக பணியாற்றிய தற்போதைய டாப் இயக்குனர்

விஜய் நடித்த யூத் படத்தில் வரும் ஆல்தோட்டா பூபதி பாடல் மிகப்பெரிய ஹிட் என்று அனைவருக்கும் தெரியும். அந்த பாடல் உருவான விதம் பற்றி இயக்குனர் மிஸ்கின் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவர். அவர் யூத் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினாராம். அப்போது பாடல் ரெகார்டிங் சமயத்தில் இவரை தான் பாடல் சொல்லித்தரும்படி சொன்னாராம் இயக்குனர்.

இவர் பாடல் லிஸ்டில் இருந்து வாலி எழுதிய பாடல் ஒன்றை எடுத்துவிட்டு ஆல்தோட்டா பூபதி பாடலை சொருகிவிட்டாராம். கபிலன் எழுதிய பாடல் அது. இசையமைப்பாளர் மணிசர்மாவுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவரால் கண்டுபிடிக்கவில்லை.

"பின்னர் பாடலை கேட்டுவிட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டென்சன் ஆகிவிட்டனர். ஆனால் பாடல் நன்றாக இருக்கிறது என கூறினர். பின்னர் அந்த பாடல் வந்து மிகப்பெரிய ஹிட். இந்த படத்தில் தான் நான் முதன்முறையாக 5000 ரூபாய்க்கு செக் வாங்கினேன்" என மிஸ்கின் கூறியுள்ளார்.