Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனு இமானுவெல் மண்டையில் பூசணிக்காய் போட்டு உடைத்திருப்பேன், சர்ச்சையை வெளியே கூறிய மிஷ்கின்

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சைக்கோ.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஒரு சர்ச்சையை மிஷ்கின் கூறியுள்ளார்.

இதில் தொகுப்பாளர் ‘இரண்டு ஹீரோயின்களை வைத்து படம் இயக்கும் போது ஏதும் பிரச்சனை வந்ததா?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘இந்த படத்தில் இல்லை, ஆனால் துப்பறிவாளன் இயக்கும் போது, அனு இமானுவெல் ஒரு காட்சியில் படுதா அணிந்திருந்தார்.

அப்போது ஆண்ட்ரியா பார்த்து நடங்கள் என்று சொல்ல, அதற்கு அனு “எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்று சொன்னார்.

உடனே நான் சென்று, அவர் எவ்வளவு பெரிய ஹீரோயின், உன் நல்லதுக்கு சொன்னால், இப்படி தான் பேசுவியா? என்று கத்திவிட்டேன்.

இருந்த கோபத்திற்கு அனு இமானுவெல் தலையில் பூசணிக்காய் போட்டு உடைத்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்.