Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகப்புகழ் ஜாக்கி சானுடன் இணைந்த பிரபல நடிகர்! பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

சண்டை கலை என்றால் உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் ஜாக்கி சான். பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அடுத்ததாக அவர் மலையாள படத்தில் இணைந்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரின் ஓட்டல் நடத்தி வந்துள்ளார்.

மேலும் அவர் இந்த சுதந்திர போராட்டத்திற்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டியதோடு தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கும் உதவியாக இருந்துள்ளார்.

இவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் மோகன் லாலுடன் ஜாக்கி சானுடன் இனைந்து நடிக்கிறார். நாயர் ஸான் என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஆல்பர்ட் ஆண்டனி இயக்குகிறாராம். படத்திற்கு ரூ 400 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.