Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முகென் தந்தை மரணம்! கண்ணீர் விட்டு அழுது பிரபலங்கள் வெளியிட்ட பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அழகான இளைஞராக ரசிகைகளை ஈர்த்தவர்களுள் ஒருவர் முகென்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன் குடும்பத்தில் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி அழுததை இன்னும் யாராலும் மறக்க முடியாதது. சிறு பிள்ளை போல பாசத்திற்காக ஏங்கு முகென் அழுதது எல்லோரையும் நெகிழ வைத்தது.

இந்நிலையில் அவரின் தந்தை பிராகேஷ் ராவ் நேற்று மாலை 6 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக செய்தி வெளியாகியுள்ளது.

முகெனை அதிகமாக நேசித்த பிக்பாஸ் அபிராமி மிகுந்த சோகத்துடன் முகென் அப்பா மரணம் குறித்து பதிவிட்டுள்ளார். மேலும் வனிதா, கவின் ரசிகர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி பதிவிட்டுள்ளனர்.

loading...