Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-அமலா பால் விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்! அவரது அப்பாவின் குற்றச்சாட்டு

இயக்குனர் விஜய் அஜித்தின் கிரீடம் படம் மூலம் இயக்குனர்ஆனவர். அதன் பிறகு விக்ரம், விஜய் என பல டாப் ஹீரோக்களோடு பணியாற்றினார். தற்போது அவர் கங்கனா நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தினை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஏ.எல்.விஜய்யின் அப்பா ஏ.எல்.அழகப்பன் அளித்துள்ள ஒரு பேட்டி சினிமா துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்-அமலா பால் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த அமலா பாலை அணுகிய தனுஷ் 'அம்மா கணக்கு' என்ற படத்தில் மீண்டும் நடிக்க வைத்தார். இதன் பிறகு தான் பிரச்சனை வந்து அமலா பால்-விஜய் பிரிந்துவிட்டனர் என அவர் கூறியுள்ளார்.