Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்போ பார்த்த அதே விஜய் தான்.. மேடையில் கண்ணீருடன் பேசிய டான்ஸ் மாஸ்டர்

நடிகர் விஜய்க்கு நடனம் choreograph செய்வது சவாலான விஷயம் என பலரும் கூறி கேட்டிருக்கிறோம். விஜய்யின் பிகில் படத்தில் வந்த வெறித்தனம் பாடலுக்கு choreograph செய்த ஷோபி மற்றும் லலிதா ஷோபிக்கு ஒரு வார இதழ் நடத்திய விருது விழாவில் விருது வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய லலிதா ஷோபி கண்ணீருடன் பேசினார். "விஜய் தன் ரசிகர்களுக்காக எப்போதும் effort போடுவார். எனக்கு கிடைக்கும் முதல் விருது இது. பெண்ணாக நம் வாழ்க்கையில் நிறைய கனவு இருக்கும். போராட்டம் அதிகம் இருக்கும். ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்."

"எனக்கு சின்ன வயதில் இருந்தே அப்பா கிடையாது. விபத்தில் தவறிவிட்டார். அதற்கு பிறகு டான்ஸ் மட்டும் தான். டான்சராக விஜய் உடன் ஆடியுள்ளேன், அசிஸ்டன்ட் choreographer ஆக பணியாட்டினேன், தற்போது choreographer ஆக பணியாற்றியுள்ளேன். அப்போது பார்த்த அதே போலத்தான் விஜய் தான் தற்போதும் இருக்கிறார்.

You may like..