Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், சூர்யாவுடன் களத்தில் இறங்கும் பிரபல நடிகர்? அப்போ அது? உண்மை இதோ!

இந்த வருடம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகவுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இதனால் படப்பிடிப்பும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதே போல சுதா கே பிரசாத் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று படம் இணைந்து வெளியாவதும் உறுதி செய்யப்பட்டதே. இந்த வரிசையில் ஆர்.ஜே.பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படமும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது லண்டனில் எடுக்கப்பட்டு வரும் தனுஷின் 40 வது படமும் கோடை விடுமுறை ஸ்பெஷலாக எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இதன் படத்திற்கு சுருளி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அது வதந்தியாம். அத்துடன் இப்படத்தில் தனுஷின் பெயர் சுருளி என்பதாம்.