சினேகா-பிரசன்னா தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு கியூட் ஜோடி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
முதலில் ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசன்னா தை மகள் வற்தாள் என்று டுவிட்டரில் தகவல் வெளியிட ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் பிரசன்னா ஒரு பேட்டியில் பேசும்போது, முதலில் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று நாங்கள் ஆத்யா என்ற பெயரை தேர்வு செய்தோம், ஆனால் ஆண் குழந்தை பிறந்தது.
இப்போது பெண் குழந்தை, வேறு பெயரின் மீது விருப்பம் இல்லை. எனவே ஆத்யந்தா என்ற பெயரை மகளுக்கு வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.