Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாட்டு தான் என்னோட ஃபேவரைட்! குஷியாகி பதிவிட்ட பிரபலங்கள்

விஜய் அமைதியாக இருக்கும் நபர் என்றும் ஆனால் குறும்பு சேட்டைகள் செய்வார் என்றும் ரசிகர்கள் கூறுவார்கள். அதே வேளையில் அவர் பொறுமையாக தனக்கு வரும் எதிர்ப்புகளையும் சமாளித்து வருகிறார்.

குட்டி கதை சொல்வது அவருக்கு மிகவும் பிடித்தது என்பது ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தது என்றே கூறலாம். தற்போது குட்டி கதையை மையப்படுத்தி மாஸ்டர் படத்தில் பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் பாடியுள்ள இந்த ஃபர்ஸ்ட் சிங்கிளை அனிருத் இசையமைக்க அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.

தற்போது இந்த பாடலை பார்த்துவிட்டு நடிகர் சந்தீப் கிஷன் சூப்பர் மச்சி இயக்குனர் லோகேஷ், தளபதி வாய்ஸ் லவ் என வாழ்த்தியுள்ளார். மேலும் மாஸ்டர் பட நடிகர் சாந்தனுவும் இதை வாழ்த்தியுள்ளார்.

அதே போல இப்படத்தில் பணியாற்றும் இயக்குனர் ரத்னகுமார் இது தான் என்னோட ஃபேரைட் பாட்டு என பதிவிட்டுள்ளார்.