Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக மேடையில் வெறித்தனம் பாடலை பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹமான் - கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் நடித்து சென்ற வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

மேலும் அப்படத்தில் நடிகர் விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல் மிக பெரிய அளவில் ஹிட்டானது, சமீபத்தில் கூட மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் 'ஒரு குட்டி ஸ்டோரி' பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று திருச்சியில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அப்போது விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடலை மேடையில் முதன் முறையாக ஏ.ஆர்.ரஹமான் பாடி அசத்தியுள்ளார். இதை கண்ட விஜய்யின் ரசிகர்கள் அந்த சுவாரஸ்யமான நிகழ்வை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.