Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் நஷ்டம் சர்ச்சை! முருகதாஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம் அதிக அளவில் நஷ்டம் என கூறி அதற்காக நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயன்றனர். அதுபோல அவர்கள் இயக்குனர் முருகதாஸை அணுகி பேசவும் முயற்சித்தனர்.

மேலும் முருகதாஸ் அலுவலகம் மற்றும் வீடு முன்பு போராட்டம் நடத்தினர். தனக்கு மிரட்டல் வருகிறது என கூறி போலீஸ் பாதுகாப்பு தர கோரி முருகதாஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.

போலீஸ் அளித்த பதிலில் இரண்டு பிரிவுகளில் 15பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் கூறியுள்ளார். இனி எந்த மிரட்டலும் வராது என விநியோகஸ்தர்கள் சமரசம் பேசியதால் வாபஸ் பெறுவதாக அவர் கூறினார்.

இதை கேட்ட நீதிபதி "நீங்கள் நினைத்தபடி சென்னை உயர் நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா?" என அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

loading...