Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் வேலை செய்ய மாட்டான், அப்போ..? வெளிப்படையாக கூறிய அருண்ராஜா காமராஜ்

அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

இதன்பின் பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். பின்பு பாடகர் மற்றும் எழுத்தாளர் போன்ற பல அவதாரங்களையும் எடுக்க துவங்கினார் அருண்ராஜா. மேலும் தனது நண்பர் எஸ்.கே Productions தயாரிக்க கனா எனும் படத்தில் இயக்குனராக திரையுலகில் வெளிவந்தார்.

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது "இயக்குனர் என்பவன் வேலை செய்பவன் அல்ல ஒருவர் இடம் இருந்து அவர்களது சிறந்ததை வேலையாக வாங்குபவன்" என்று வெளிப்டையாக கூறினார்.

மேலும் இவர் தற்போது விஜய் நடித்து கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தில் ஒரு குட்டி ஸ்டோரி பாடலை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.