Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்ட பிரபலங்கள்! ரகசியம் இதுதானாம்

உலகளவில் மிகவும் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர் மற்றும் அவரின் மனைவி ஹெய்லி பால்ட்வின். கடந்த 2018 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அண்மையில் ஒரு நேர்காணலில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அவசரப்படவில்லை, காலம் இருக்கிறது என கூறியுள்ளனர்.

பால்ட்வினுடனான தன்னுடைய திருமணத்தில் தங்களுடைய உறவை மிகச்சிறந்ததாக மாற்றுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி பிபர் பேசியுள்ளார்.

திருமண வாழ்க்கை மிகவும் அருமையானது, நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் அதை முறித்துக்கொண்டு விடாதீர்கள். காரணம் திருமணம் எளிதானது அல்ல என்று கூறியுள்ளார்.

இது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று, திருமணம் எளிதானது என்றால் அனைவரும் அதைத்தான் விரைவாக செய்வார்கள் என கூறியுள்ளார்.