Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேட்பாரற்று தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர்! அந்த பிரபல நடிகர், நடிகையின் படத்தின் முக்கிய நபர் இவர் தானாம்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்பவர்கள் பலர். ஏதாவது பாதை கிடைத்தால் அதைக்கொண்டு தனக்கான இடத்தை பிடித்துவிடலாம் என போராடுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை வடபழனி சாலையோரம் அழுக்கு படிந்த கிழிந்த உடையுடன், சிக்கு பிடித்த தலையோடு கையில் பேப்பர் பேனாவுடன் இருந்தவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அவரிடம் அருகில் சென்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை திருவிட்டனர் என கூறியுள்ளனர். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வைத்திருந்தாராம்.

சிம்ரனின் தங்கை மோனல் மற்றும் நடிகர் குணால் நடித்த பார்வை ஒன்றே படத்தின் உதவி இயக்குனர் குருநாதன் என்பது தெரியவந்துள்ளது. அவர் வாய்ப்பு தேடி பலமுறை அலைந்த போது எதுவும் கிடைக்காமல் சாப்பிட வழியில்லாமல் பிச்சைக்காரர் போல கிடந்து பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்நிலையில் அவரின் நண்பர் உடனே குருநாதனை சொந்த ஊரான திருச்சி மணப்பாறைக்கு அழைத்துச்சென்றுள்ளாராம்.

loading...