Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வழக்கு போட அவருக்கு எந்த உரிமையும் இல்லை.. இயக்குனர் கௌதம் மேனன் கோபமான பதிலடி

நடிகையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரிஸ் சில மாதங்கள் முன்பு ரிலீஸ் ஆனது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இதுபற்றி கெளதம் மேனன் தரப்பு அளித்துள்ள பதிலில் "ஜெயலலிதா முதலமைச்சராக உயிருடன் இருந்த போது அவரை நேரில் பார்க்கக்கூட முடியாத ஜெ.தீபா அவரது நெருங்கிய உறவினர் என கூறி குயின் தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர எந்தவித உரிமையும் இல்லை" என தெரிவித்துள்ளனர்.