Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் பட பிரபலத்தின் மாஸான அடுத்த அதிரடி! பாராட்டிய பிரபல நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 9 ம் தேதி வெளியாகவுள்ள படம் மாஸ்டர். கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் கூடியுள்ளது.

அண்மையில் இப்படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடவைத்தது. அனிருத் இசையமைத்த இந்த பாடலுக்கு அருண் ராஜா காமராஜ் இசையமைத்திருந்தார்.

அவர் தற்போது அடுத்ததாக பேசாத மொழியே என்னும் பாடலை சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம் டா படத்திற்காக எழுதியுள்ளாராம். அருண் ராஜா இயக்கத்தில் வெளியான கனா படத்தின் இசையமைப்பாளர் திபு தான் இப்பாடலுக்கு இசையமைக்கிறாராம்.

கனா தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இருவரையும் வாழ்த்தியுள்ளார். ஹரி சங்கர், சின்மயி என இருவரும் பேசாத மொழியே பாடலை பாடியுள்ளனராம்.