Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம், இது தான் தலைப்பா..!

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்து வெளிவந்த படம் திரௌபதி. இப்படம் வெளிவருவதற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கி அதன்பின் தான் வெளிவந்தது.

இப்படம் வெளிவந்து ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

அந்த வகையில் படம் வெளிவந்த முதல் வாரத்தின் இறுதியில் ரூ 11.30 கோடி வரை வசூலித்திருந்தது.

மேலும் இரண்டாம் வர இறுதியில் ரூ 13.90 கோடி வரை வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனை கூட நாங்கள் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் இப்படம் இயக்குனரான மோகன்.ஜி அண்மையில் அளித்த பேட்டியில் "இப்படத்திற்கு திரௌபதி என்று கடவுள் பெயரை வைத்ததால் தான் இப்படத்தின் மீதி வன்மம் காட்டப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் தனது அடுத்த படத்திற்கும் கடவுள் பெயரையும் வைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.