Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வருமானத்திற்கு காரணம் விஜய் தான், விஜய் பட பிரபலம் கூறிய தகவல்

தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளிவரும் என்று படத்தின் இயக்குனரே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் படங்களில் அனைவரும் மிக முக்கியமாக கருதுவது பாடல்கள் தான். அந்த வகையில் விஜய்யின் திரையுலக தொடக்க காலத்தில் நிறைய பாடல்கள் ரசிகர்களிடையே வெற்றியடைந்துள்ளது.

அதில் ஒன்று தான் ஆல்தோட்ட பூபதி பாடல். இப்பாடலை பிரபல கவிஞர் திரு கபிலன் எழுதி இருந்தார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "என் வாழ்வில் புகழும், வருமானமும் உயர தளபதி விஜய் தான் காரணம். ஆம் நான் அவருக்கு எழுதிய அந்த ஆல்தோட்ட பூபதி பாடல் என்ன பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்து என்று வெளிப்படையாக கூறினார்.