Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தம்பி விஷால் உனக்கு இருக்கு ஆப்பு- பொது மேடையில் மிஷ்கின் ஆவேச பேச்சு!

மிஷ்கின் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கிவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த சைக்கோ படம் கூட பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் விஷாலுடன் மிஷ்கின் துப்பறிவாளன் என்ற படத்தில் பணியாற்றினார், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வந்தது.

ஆனால், பணம் அதிகம் செலவாகிவிட்டார், மிஷ்கின் சொன்ன தேதியில் படம் எடுக்கவில்லை.

பாதியிலேயே படத்தை விட்டு ஓடிவிட்டார் என பல சர்ச்சைகள் இப்படத்தை பற்றி இருந்து வந்தது.

பிறகு விஷாலே அந்த படத்தை எடுப்பதாக அதிகாரப்பூவர்மாக அறிவித்தார், இன்று இதற்கு மிஷ்கின் ஒரு பொது மேடையில் பதிலடி கொடுத்துள்ளார்.

விஷால் சொன்னதை எல்லாம் மறுத்ததோடு மட்டுமில்லாமல், கடைசியில் ‘விஷால் உனக்கு இருக்கு ஆப்பு’ என்று கூறி மேடையை விட்டு இறங்கியுள்ளார்.

இது பார்த்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, அதோடு இந்த பிரச்சனை இன்னும் எத்தனை நாட்களுக்கு போகும் என்றும் தெரியவில்லை.