Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரண்மனை 3 படத்தை இந்த பாணியில் தான் உருவாகியுள்ளார்களாம்.. இணைத்தளத்தில் கசிந்த தகவல்..

இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 திரைப்படங்கள் இரண்டுமே ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அந்த இரண்டு திரைப்படங்களிலுமே ஹாரரும் காமெடியும் கலந்து நன்றாக அமைத்திருந்ததால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ரசித்தனர்.

மேலும், தற்போது அரண்மனை திரைப்படத்தின் மூன்றாம் பாகமான அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

இப்படத்தில் ஆர்யா கதாநாயகானாகவும் இவருடன் ராஷி கண்ணா, ஆண்டிரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக், மனோபாலா, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த பிரத்யேக தகவல் ஒன்று இணையத்தளங்களில் பரவி வருகின்றது. அரண்மனை3 திரைப்படம் முந்தைய இரண்டு பாகங்களை போல் இல்லாமல், முற்றிலும் வேறுமாதிரியான கலரில் இருக்குமாம்.

மேலும், சுந்தர்.சி யின் ஸ்டைலில் செம காமெடியும், பக்கா ஹாரரும் கண்டிப்பாக இருக்குமேன என செய்திகள் பரவி வருகிறது.