Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜகமே தந்திரம் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த மாஸ் அப்டேட்..

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக கருதபடுபவர்.

இவர் இயக்கத்தில் 2012ல் வெளியான பிச்சா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அப்படத்தினை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்ற கார்த்திக் சுப்புராஜ், தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

கடந்த 2019ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார். மேலும் அப்படம் மிக வெற்றியடைந்த்து.

இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய கார்த்தி சுப்புராஜ், ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மாஸான அப்டேட் கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில் “கொரோனா வைரஸ் கராணமாக ஜகமே தந்திரம் அப்டேடை தர முடியவில்லை, இந்த பிரச்சனையெல்லாம் முடிந்த பிறகு கண்டிப்பாக அப்பேட் வரும்.

மேலும், படம் ரொம்ப நல்ல வந்துருக்கு” என் கூறியுள்ளார்.