Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல பிரபலங்களின் படத்தில் பணியாற்றிவரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! புகைப்படம் இதோ - நேரில் அஞ்சலி

விஜய் நடித்த திருமலை, சூர்யா நடித்த நந்தா, வாரணம் ஆயிரம், நயன்தாரா நடித்த சயீரா, ரஜினி நடித்த எந்திரன், விக்ரம் நடித்த சேது ஆகிய படங்களுக்கு புகைப்பட இயக்குனராக பணியாற்றிவர் ரத்ன வேலு.

அவரின் அம்மா ஞானேஸ்வரி 80 வயதில் இன்று காலமானதாக அவரே டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் என்னுடை கனவு, லட்சியத்தை வார்த்தைகளால் அல்லாமல் கண்கள் மூலமே புரிந்துகொண்டவர் என்னுடைய அம்மா, எனக்காக நின்றவர், ஆதரவளித்தவர், வாழ்க்கையில் நான் சாதித்தது, வெற்றியடைந்தது எல்லாமே அவரால் தான், அவரால் நான் இன்று இல்லை, என்னுடைய உற்சாகம், என்னுடைய சந்தோசம், சர்வமும் அவரே, அம்மாவை பிரிந்துவிட்டேன், அன்பிற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சங்கர் நேரில் சென்று ரத்ன வேலுவின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா பிரபலங்கள் ரத்ன வேலுவின் அம்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சினிஉலகம் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துகிறது.