Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் பட வசனத்தை பதிவிட்டு மாஸ் காட்டிய பிரபலம்! வைரலாகும் வீடியோ

கடந்த வருடம் தீபாவளிக்கு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ரூ 300 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் சாதனை செய்ததாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது.

இதனை ரசிகர்களும் மிகவும் கொண்டாடினர். வழக்கம் போல விஜய் படங்களை போலவே இந்த படமும் சில சிக்கல்களை சந்தித்தன. இப்படத்தில் விஜய் மூன்று விதமான கெட்டப்களில் அசத்தினார்.

கால்பந்து விளையாட்டில் நடக்கும் மோசடியை தோலுரிக்கும் விதமாக இப்படத்தை எடுத்ததோடு, பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் விதமாகவும் படம் அமைந்தது.

இப்படத்தில் அப்பா விஜய்யான ராயப்பன் பேசும் வசனத்தை தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக காவல் துறை அதிகாரி அர்ஜூன் பயன்படுத்தியுள்ளார்.