Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை! சம்மந்தப்பட்டவர்கள் நிறைவேற்றுவார்களா

தமிழ் திரையுலகம் தொடர்ந்து அடுத்தடுத்து சோகமான செய்திகளை தாங்கி வருகிறது. அண்மையில் நடிகர் விசு காலமானார். பின் நடிகரும் மருத்துவருமான சேது காலமானார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார். இது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

வயது முதிர்வால் முனியம்மா அண்மைகாலமாக ஓய்விலேயே இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனையில் வைத்து நடிகர் அபிசரவணன் சிகிச்சை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த செய்தியையும் நாம் அறிவோம் தானே.

அப்போதே முனியம்மா பாட்டி சிகிச்சைக்கு போதுமான பண வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கூட அவருக்கு பண உதவி செய்திருந்தார்.

அதே வேளையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரவை முனியம்மாவுக்கு ரூ 6 லட்சம் வங்கி நிரந்தர வைப்புத்தொகையாக கொடுத்து உதவி செய்தார்.

இதன் மூலம் கிடைத்த வட்டி பணத்தை கொண்டு முனியம்மா தன் அன்றாட தேவையை பூர்த்தி செய்து வந்தார்.

மேலும் அவர் தனக்கு பின் மனவளர்ச்சியில்லாமல் தன்னுடைய மகனுக்கும் அந்த உதவியை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தார்.

அதை தமிழக அரசு நிறைவேற்றுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.