Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் பாட்டுக்கு ஜோடியாக நடனமாடி மாஸ் காட்டிய பிரபலங்கள்! வீடியோ இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் மாஸ்டர். இப்படம் வரும் ஏப்ரல் 9 ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா வைரஸால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வெளியாவது தள்ளிப்போயுள்ளது. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பு தொழில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் ரசிகர்களுக்கும் சோகம் தான். விஜய்யுடன் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களின் மனதை கவர்ந்தன.

விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிறகு பலரையும் ஈர்த்த ஒரு பாடல் வாத்தி கம்மிங். தற்போது வீட்டிலிருக்கும் ரோபோ சங்கர் மற்றும் இந்திரஜா இருவரும் அப்பாவும் மகளுமாக கலக்கலாக நடனமாடி டிக்டாக் செய்துள்ளார்கள்.

அந்த வீடியோ இதோ.