Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை வாணி போஜனுக்கு ஜோடியாகும் லவ் ஹீரோ! முக்கிய இயக்குனரின் படைப்பில் - சூப்பர் காம்பினேசன்

தெய்வ மகள் சீரியல் சத்யா என்றதும் அனைவரின் நினைவிற்கும் வருபவர் வாணி போஜன் தான். சின்னத்திரையில் வந்த வேகத்தில் உச்சம் பிடித்தவர் பெரிய திரையிலும் வந்துவிட்டார்.

அண்மையில் அவர் ஹீரோயினாக அறிமுகமான ஓ மை கடவுளே படம் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து சில பட வாய்ப்புகளும் வாணி போஜனுக்கு வந்தது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். இதில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடிக்கிறார். இந்த வலைதொடரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க அவரின் உதவியாளர் இயக்குகிறாராம்.

இப்படம் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறதாம்.