Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் வரிசையில் பிரபல நடிகை, நடிகர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா ஊரடங்கால் சினிமா தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சினிமா ஊழியர்கள் வறுமையில் வாடி வந்த நிலையில் பலரும் நிதிஉதவி அளித்தார்கள்.

அதே வேளையில் தயாரிப்பாளர்களில் நலனை கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், நடிகை ஆர்த்தி, உதயா ஆகியோர் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் நடிகை டாப்சி தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தன் சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும், சினிமா சகஜ நிலைக்கு திரும்பும் வரை சம்பளம் குறைக்கப்படுவதை தவிர்க்க முடியாது என கூறியுள்ளார்.

அதே போல நடிகர் நாசர் கபட தாரி என்ற படத்திற்காக தன் சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்து உதவியுள்ளாராம்.