Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியை கடுப்பேற்றிய நபர்! அந்த ஒரு கேள்வி - மணிமேகலை ரியாக்சன்

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் மணிமேகலை. அண்மையில் நடைபெற்று முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

சினிமா நடனக்கலைஞர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதம் மாறி அவர் கல்யாணம் செய்து கொண்டாலும் சில எதிர்ப்புகள் அவருக்கு இருக்கத்தான் செய்தன.

அண்மையில் அவர் தன் கணவருடன் இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரமலான் வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

முன்பெல்லாம் என் நண்பர்களிடம் நான் தான் பிரியாணி கேட்பேன். இப்போது எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் ஒரே நகைச்சுவையாக இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.

ஆனால் ஒருவர் அவரிடம் எப்படியோ ஒரு வழியாக மதம் மாற்றிவிட்டான். இதுக்கு பெயர் தான் லவ் ஜிகாத் என எதிர்விதமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் மணிமேகலை, ரம்ஜான் வாழ்த்து சொல்லவதற்கு மதம் மாறிவிட்டு தான் சொல்லனுமா? யாரும் இங்கு மதம் மாறவில்லை, ஹூசைன் என்னுடன் கோவிலுக்கு வருவார். நாங்கள் ரம்ஜானும் கொண்டாடுவோம். நாங்கள் இதில் தெளிவாக உள்ளோம். உங்கள் குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள் என கூறியுள்ளார்.