Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் அடுத்த படம் குறித்த அப்டேட், இது தானா? மீண்டும் இணையும் முன்னணி கூட்டணி!

இயக்குனர் அட்லீ தனது தமிழ் சினிமா பயணத்தில் குறுகிய காலத்திலே மிக பெரிய உயரத்தை தொட்டுவிட்டார் என கூறலாம்.

தற்போது முன்னணி இயக்குனராக திகழும் அட்லீ, இவர் இயக்கிய அணைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவரின் அடுத்த திரைப்படம் எந்த நடிகருடன் இருக்கப்போகிறது என்ற கேள்வி இப்போதுவரையில் இருந்து வருகிறது. மேலும் பாலிவுட் ஷாருக் கான் வைத்து இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் மெர்சல், பிகில் ஹிட் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.