Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடலாசிரியர் மரணம்! மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்

சினிமா படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. படத்தின் வெற்றிக்கு பாடல்களும் உறுதுணையாக இருக்கின்றன. அவ்வகையில் பெருமை பாடலாசிரியர்களையே சேரும்.

அண்மையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர்களான இம்ரான் கான், ரிஷி கபூர் ஆகியோர் புற்றுநோயால் காலமான செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் மூத்த பாடலாசிரியரான யோகேஷ் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77. 1962 முதல் சினிமாவில் பணியாற்றியவர் கடைசியாக 2018 ல் Angrezi Mein Kehte Hain படத்தில் பாடல் எழுதினார்.

அவரின் மறைவால் பாடலாசிரியர் ஜாவத் அக்தர் வேதனையடைந்துள்ளார். பல அற்புதமான பாடல்களை எழுதிய அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் ஜாவத் கூறிள்ளார்.

மேலும் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் யோகேஷ் எழுதிய பாடல்கள் நான் பாடியுள்ளே. அமைதியான, இனிமையான மனிதர் அவர் என கூறியுள்ளார்.