Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமான பிக்பாஸ் நடிகை! அப்பாவான மகிழ்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

அரிமா நம்பி படத்தில் ஐட்டம் நடிகையாக நானு உன்னில் பாதி என்ற பாடலில் நடித்து தமிழ் சினிமாவில் முகம் காட்டியவர் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்.

செர்பியா நாட்டை சேர்ந்த இவர் பல ஹிந்தி படங்களின் பாடல்களில் நடித்து வருவதோடு மாடலிங் நடிகையாகவும் இருக்கிறார். கடந்த 2019 ல் ஷாருக்கான் நடிப்பில் வந்த Zero படத்திலும் நடித்திருந்தார்.

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 8 ல் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். The Holiday என்னும் வெப் சீரிஸிலும் நடித்து வந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

தற்போது நடாஷா கர்ப்பமாக உள்ளாராம். இதுகுறித்த தகவலை புகைப்பத்துடன் வெளியிட்ட ஹர்தியா, நாங்கள் வாழ்க்கையில் புதிய பக்கத்தை புரட்டி பார்க்க ஆவலாக இருக்கிறோம். உங்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் வேண்டும் என பதிவிட்டுள்ளார்.