தமிழ் சினிமாவில் பாடி, நடித்து பிரபலமான மூத்த நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களை பலரும் செல்லமாக பாட்டி என அழைப்பதுண்டு. அந்த பாட்டிகள் சிலர் மட்டுமே. அதில் ஒருவர் கொல்லங்குடி கருப்பாயி. இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜுடன் ஆண் பாவம், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
அகில இந்திய வானொலியில் 30 வருடங்களாக பாடி பணியாற்றி வந்த அவர் தன் கணவரின் மறைவுக்கு பின் பாடுவதை நிறுத்திக்கொண்டார். பின் அவரின் மகளும் இறந்துவிட்டார்.
கலைமாமணி விருது பெற்று அண்மையில் சாலையை கடக்கும் போது இரு சக்கர வாகனம் மோதியதில் காலில் பலமாக அடிப்பட்டு காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.