Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாத்தான்குளம் சம்பவத்தில் பாடகிக்கு போலிஸ் போட்ட கண்டிசன்! நீக்கப்பட்ட சர்ச்சை வைரல் வீடியோ - அதிரடி அறிக்கை இதோ

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த அப்பா, மகன் கொல்லப்பட்ட சம்பவம். போலிசாரின் கண்காணிப்பில் இருந்தவர்கள் இறந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய போலிஸார் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பலரின் கவனத்தை பெற்றது பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவால் தான். இவ்வீடியோ சமூகவலைதளத்தில் மிகுந்த கவனத்தை பெற்ற பலராலும் பார்க்கப்பட்டு வைரல் வீடியோவாக வலம் வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் சிபிசிஐடி போலிசார் அந்த வீடியோவை நீக்கும் படி பாடகி சுசித்ராவுக்கு கண்டிசன் போட்டுள்ளனராம். இதனால் அவர் வீடியோவை நீக்கியுள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில் சுசித்ரா வெளியிட்ட விடியோ அடிப்படை ஆதாரமற்றது, என்ன நடந்தது என்பதை காட்டவில்லை, இது சுசித்ராவால் மிகைப்படுத்தப்பட்டது, கற்பனையின் பால் சர்ச்சையாக்கப்பட்டது. புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

You May Like This Video