Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இத்தனை படங்களில் துணை நடிகராக நடித்துள்ளரா! புகைப்படங்களுடன் இதோ..

ஜெண்டில் மேன் எனும் சிறந்த படத்தை ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை வைத்து இயக்கியவர் ஷங்கர்.

இதன்பின் காதலன், இந்தியன், முதல்வன் என பல தலைசிறந்த படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார்.

மேலும் ரஜினி, கமல், விஜய், விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் பணிபுரிந்துள்ளார்.

எந்திரன், 2.0 என பிரம்மாண்டம் நிறைந்த படங்களை இயக்கி தற்போது தமிழ் திரையுலகில் மாபெரும் உச்சத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஷங்கர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றியது நமக்கு தெரியும்.

ஆனால் எஸ்.ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான பல படங்களில் துணை நடிகராகவும் இயக்குனர் ஷங்கர் நடித்துள்ளார்.

ஆம் இதோ அவர் நடித்து படத்தின் காட்சி புகைப்படங்கள்..