Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி! போட்டோ இதோ - ரசிகர்கள் கொண்டாட்டம்

பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரம் இது. ஆனால் கொரோனா ஊரடங்கால் டிவி, சினிமா நிகழ்ச்சி படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் டிவி சானல் நிறுவனத்தினர் இருப்பதை கொண்டு சமாளித்து வருகின்றனர்.

இதனால் 100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகும் நிலையை எட்டியுள்ளது. தெலுங்கிலும் சீசன் 4 ஐ யார் கலந்துகொள்ளப்போகிறார்கள், யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

டிவி, சினிமா, மற்ற துறை சார்ந்தவர்கள் என பலரையும் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. முதல் சீசனில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரிப்பிரியா, இரண்டாம் சீசனில் விஜே சியாமளா, மூன்றாம் சீசனில் ஸ்ரீமுகி என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் வரிசையில் 4 ம் சீசனில் விஜே லஸ்யாவை நிகழ்ச்சிக்குழு அணுகியுள்ளதாம்.

லஸ்யாவுக்கு திருமணமாகி அண்மையில் குழந்தை பிறந்ததால் தன்னுடைய பணிகளுக்கு சில மாதங்கள் ஓய்வு கொடுத்துள்ளார். லஸ்யாவை பிக்பாஸில் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.