Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு குழந்தை பிறந்தாச்சு! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

டிவி நிகழ்ச்சிகளில் மக்கள் பலரை மிகவும் ஈர்த்த ஒன்று சூப்பர் சிங்கர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கவர்ந்த ஒன்று.

இதில் போட்டியாளர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற பலரும் சினிமா, மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடிவருகிறார்கள்.

இதில் ஒரு வெற்றியாளர் பாடகர் திவாகர். சினிமா படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று பாடி வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீமராஜா படத்தில் வாரேன் வாரேன் சீமராஜா பாடலையும், நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு படத்தில் இண்டெர்நெட் பசங்க பாடலையும் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2019 டிசம்பரில் அவருக்கு இசையமைப்பாளர் இமான் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவரின் மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக என் தந்தை எனக்கு மகனாக பிறந்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

அவருக்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்.