Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதாவின் கணவர் பற்றி வெளி தெரியாத ரகசியங்கள்! ஆதாரத்துடன் பிரபல நடிகை, தயாரிப்பாளர் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சையான செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணமும் அதை சார்ந்த பிரச்சனைகளும் தான். போலிஸ்க்கு செல்வதும், பேட்டி கொடுக்கப்படுது, கண்ணீர் வடிப்பதும், பதிலடி கொடுப்பதும் என அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தன் திருமணம் குறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் என பலரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை வனிதா.

இதற்கிடையில் சூரியா தேவி என்ற பெண்ணுடனும் வனிதாவுக்கு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. வனிதா, தயாரிப்பாளர் ரவீந்திரனை மரியாதை குறைவாக பேசிவந்தார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பீட்டர் பால் எவ்வளவு தவறான நபர், பெண்களுடன் அவருக்கு இருக்கும் சகவாசம் என்ன என பல விசயங்களுக்கான ஆதாரம் இருக்கிறது. போலியாக ஒரு ஷோ நடத்தி, மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவ்விசயங்கள் நான் என்னுடைய சேனலில் வெளியிடப்போகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் ரவீந்திரன், பீட்டர் பாலை இன்னும் ஒரு முறை நேரலையில் வரசொல்லுங்கள், பிறகு நான் லைவ் விடுகிறேன். அவரை பற்றி பல விசயங்களை ஆதாரத்துடன் வெளியிடப்போகிறேன் என கூறி ஊர்மிளா ஷர்மா என்பரை பெயரை குறிப்பிட்டு முதல் ஆதாரமாக கூறி பரப்பரபை ஏற்படுத்தியுள்ளார்.