Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலமைச்சரை சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகையின் கணவர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

கொரோனா இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமானோரை இந்தியாவில் பாதிக்கச்செய்துள்ளது. அதே வேளையில் இந்த கொடிய வைரஸால் இதுவரை பலியானவர்கள் 27 ஆயிரம் பேர்.

சினிமா தொழில் முடக்கப்பட்டதால் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இச்சமயத்தில் சினிமா பிரபலங்களின் மரணங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.

தற்போது ஒடியா சினிமாவை சேர்ந்த பிரபல இயக்குனர் பிஜாய் மொஹந்தி நேற்று உடல் நலக்குறைவால் தலைநகர் புவனேஸ்வரில் காலமானார்.

70 வயதான அவர் நீண்ட நாட்களாகவே உடல் சுகமில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மருத்துவமனையிலேயே இறந்துள்ளார்.

அவரின் மனைவி தந்திரா ராய் ஒடியா சினிமாவில் முக்கிய நடிகை. இத்தம்பதிக்கு ஜாஸ்மின் என்ற மகள் இருக்கிறார்.

பிஜாய் மரணத்தால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பிஜாய் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.