Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமன்னாவை கைது செய்யுங்க! இவரையும் சேர்த்து தான் - நீதிமன்றத்தில் வழக்கு! சர்ச்சையின் பின்னணி

நடிகை தமன்னா தட் இஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து வந்தார். ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் இது. தமிழ் படங்களில் தமன்னா கதை மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களின் மீதே ஆர்வமாக இருக்கிறார்.

அதே வேளையில் தெலுங்கு படங்களில் நடித்து வரும், ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியும் வரும் அவர் தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் போனதால் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் அவரும் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தனர். இந்நிலையில் இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ளதாக அவரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யுமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதி நடைபெறவுள்ளதாம்.