Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இப்படிபட்டவர் தான், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பது இதுதான்- வலிமை இயக்குனர் வினோத்தின் ஓபன் டாக்

இயக்குனர் வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கி மக்கள் பார்வைக்கு வந்தவர்.

பின் அவர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அவருடைய பணிபுரிவது பிடித்துபோக அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அஜித், வினோத் அவர்களுக்கே கொடுத்துள்ளார்.

இவருக்கு இன்று பிறந்தநாள், ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதோடு அஜித் குறித்து வினோத் பேசிய ஒரு பதிவும் அண்மையில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அஜித் அவர்கள் பாசிட்டீவான மனிதர், தன்னைச் சுற்றி பாசிட்டீவ் மட்டுமே தக்கவைக்க நினைப்பார்.

குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர், தன் ரசிகர்கள் பற்றி அதிகம் கவலைப்படுவார்.

ஒவ்வொரு ரசிகனும் சினிமா சினிமா என்று இருக்க கூடாது, அது மட்டுமே வாழ்க்கை கிடையாது.

தங்களுடைய குடும்பம் தனிப்பட்ட வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று நினைப்பார் என வினோத் கூறியுள்ளார்.