Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய எஸ்.பி.பி! மருத்துவமனையில் நடந்த கொண்டாட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன் பலரின் மனங்களில் இடி போல் விழுந்த செய்தி பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்பதே.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சையில் இருக்க அவருக்காக உலகம் முழுக்க இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தனர்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் அவரின் உடல் நலம் முன்னேறியது. தற்போது அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் இருக்கும் அவர் நேற்று ஐசியுவில் தன் மனைவியுடன் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

உடன் மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்க பலருக்கும் உற்சாகமளித்ததுள்ளது.