பிக்பாஸில் நான் தவறு செய்தேன்! வெறுத்தேன்! ஆனால் - பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு!
பிக்பாஸ் ஐ அம் வாட்சிங் என்ற டேக் லைன் பலரின் மனங்களில் மீண்டும் ஓடத்தொடங்கியுள்ளது. பொழுதுபோக்காகவும், போட்டியாகவும் நடத்தப்பட்டும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு சற்று தாமதம் தான்.
கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளது. அண்மையில் வந்த புரமோவால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த சீசனில் வந்த வேகத்தில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணாக எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தார்.
சேரனின் மகள் போலவே பார்க்கப்பட்டவர் ஆரம்பத்தில் பலருக்கும் பிடித்துப்போனார். பின் அவரின் நடவடிக்கைகள் முகம் சுளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 குறித்து அவரிடம் சாட்டில் ரசிகர்கள் பேசிவருகிறார்.
இதற்கு அவர் பிக்பாஸில் வாழ்ந்தேன், காதலித்தேன், தவறவிட்டேன், இழந்தேன், வெறுத்தேன், நம்பினேன், தவறும் செய்தேன். ஆனாலும் எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.