Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் திருமண புகைப்படம் - இதோ

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பட வருடங்களுக்கும் மேலாக, காமெடி கலைஞாராய் மக்களின் துன்பத்தை நீக்கி மகிழ வைத்து கொண்டிருந்தவர் வடிவேல் பாலாஜி.

காமெடி நடிகர் வடிவேல் போலவே தோற்றமலிக்க கூடிய வடிவேல் பாலாஜி, ஆச்சு அசல் அப்படியே நடிகர் வடிவேலுவை அவரின் கெட்டப்பில் நம் கண் முன்னே கொண்டு வருவார்.

மேலும் இதுவரை கலக்கப்போவது யாரு சப்பியன்ஸ், சிரிச்சா போச்சு, மற்றும் பல நிகழ்ச்சிகள் காமெடி கெஸ்ட் ரோல்களில் வந்து நம்மை சிரிக்க வைத்து கொண்டிருந்தார்.

தீடீரென இரு தினங்களுக்கு முன் உடல் நலக் குறைவு காரணமாக வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். நடிகர் வடிவேல் பாலாஜியின் மரண செய்தி தமிழ் திரையுலகில் உள்ள பலரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு சிறிது ஆறுதல் தரும் வகையில் அவரின் திருமண புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் இணையத்தில் ஷார் செய்து வருகின்றனர்.

இதோ வடிவேல் பாலாஜியின் புகைப்படம்..